Tuesday, December 2, 2008

குறள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

Wednesday, November 19, 2008

குறள்

நிலத்தியல்பால் நீர் திரிந்தர்த்தகும் இனத்தியல்பால்
தாகும் மனித அறிவு .

-திருக்குறள்
கருத்து:
மழை நீர் எவ்வளவு சுத்த மனதாக இருப்பினும் அது எந்த நிலத்தை அடைந்தாலும் அந்த மண்ணின் குணத்தையே அந்த மழை நீர் பெரும் .அது போல மனிதர்களின் அறிவும் ,குணநலன்களும் அவர்கள் சேரும் இனத்தை பொருத்தது.

Tuesday, September 2, 2008

திரு மந்திரம்

அத்தி பழமும் அகத்திக் கீரை வித்தும்
கொத்தி உலைப் பெய்து கூல் இட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அகத்திக் கீரை வித்துன்ன
கத்தி எடுத்தவர் காடு புக்கரே.

Wednesday, May 28, 2008

ஆத்திசூடி

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விலம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் தவிர்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்

குறிப்பு:மன்னிக்கவும்.நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது மனப்பாடம் செய்த பாடலாதளால் இப்பாடலின் கடைசி இரு வரிகள் மறந்து விட்டது.

பரஞ்சோதி அடிகள் பாடல்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர்;
அன்பே சிவமாவதை யாரும் அறிகிலர்;
அன்பே சிவமாவதை யாரும் அறிந்தபின்;
அன்பே சிவமாய் அம்ர்ந்திருப்பரே.

Monday, May 26, 2008

தாயுமான சுவாமி-பாடல்

ஆசைக்கோர் அளவில்லை
அகிலமெலாம் கட்டி ஆளினும்
கடல் மீது ஆணை செலவே நினைவர்
அழகேசன் நிகராக ஐந்து பொன் வைத்திருப்போரும்
ரசவாத வித்தை கலைந்திடுவர்
நெடுநாள் இருந்தபேரும் நிலையாகவே இன்னும்
காயகல்பம் தேடி நெஞ்சு புண்ணவார்
எல்லாம் நினைத்து பார்க்கும் வேளையில்
உண்ண உணவும் உடுக்க உடையும் தவிர வேறில்லை
எங்கும் சிவமயமாய் அமர்ந்திருப்போனே.




பரஞ்சோதி அடிகளார் பாடல்

அறிவை அறிந்தோர் அன்பை மறவார்
பொருளை அறிந்தோர் புகழை விரும்பார்
கருவை அறிந்தோர் கடவுளை நாடார்
குருவை அடைந்தறிந்தோர் குறைவில்லாதவர்;சந்தேகமில்லதவர்;

சந்தோஷ் சுப்பிரமணியம்-திரைப்படம்

நான்நேற்றுசந்தோஷ்சுப்பிரமணியம்திரைபடத்தைகண்டுகளித்தேன்.இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.குடும்பம்,காதல்,நண்பர்கள்,என்று முழுக்க முழுக்க சிரிப்பு நிறைந்த படம்.படத்தில் நடித்திருந்த ஒவொருவரும் தங்கள் நடிப்பு திறனை அற்புதமாக வெளிபடித்தி இருக்கிறார்கள்.சமீபத்தில் நான் மிகவும் ரசித்து பார்த்த படம் என்றால் அது இதுதான்.ஆதலால் நண்பர்களே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இத்திரைபடத்தை கண்டு களிக்க வேண்டுகிறேன்.

Wednesday, May 21, 2008

மூதுரை பாடல்


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை.

Wednesday, May 14, 2008

அபிராமி அந்தாதி பாடல்

தனம் தரும்; கல்வி தரும்; ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்;
தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்;
நல்லவை எல்லாம் தரும்; அன்பர் என்பவர்கே கணம் தரும்;
கடைக்கண் அபிராமி பூங்குழலே.

Tuesday, May 13, 2008

கை வல்ய நவநீதம்


சித்து நான் நிறைந்தோன் என்ற திடம் மறவாதிருந்தாள்
எத்தனை எண்ணினாலும் ஏது செய்தாலும் என்ன
நித்திரை தெளிந்த பின்பு நிற்கின்ற கனவினை போல
அத்தனையும் பொய்தானே ஆனந்த வடிவு நானே

ராமலிங்க சுவாமிகள் பாடல்

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கிற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும்:
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெண்ணாசையை மறக்க அருள வேண்டும்
உனை என்றும் மறவாதிருக்க வேண்டும்
நோய் நொடி இல்லா மரணமிலா பெருவாழ்வு வாழ வேண்டும்

Monday, May 5, 2008

Here I would like to share my personal views which has so many pros and cons.