Sunday, April 26, 2009

மூதுரை

நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்உழகில்
நல்லார் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெயுமாம் மழை .

கருத்து:
ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான்.அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயளை சென்றடைகிறது.அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும்.அதுபோல இவ்வுலகில் நன்மக்கள் இருக்கின்ற காரணத்தினால் பெய்யும் மழையானது அங்கே வாழ்கின்ற கீழ்மக்களுக்கும் பயனை கொடுக்கும்.
உவமை: நெல்பயிர் - நன்மக்கள்
புல் - கீழ்மக்கள்