Wednesday, May 6, 2009

பசங்க -திரைப்படம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பசங்க என்ற திரைப்படம் கண்டு களித்தேன் .படத்தில் ஹீரோக்கள் இல்லை .தேவைஇல்லாத சண்டைக்காட்சிகள் இல்லை.கர்சிக்கும் வசனம் இல்லை.ஆபாசம் இல்லை: ஆரவாரம் இல்லை.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் ஓரளவு தங்கள் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.இது போன்ற திரைப்படங்களை நாம் கண்டிப்பாக வரவேற்க வேண்டும்.அப்படி வரவேற்க தவறினால் மீண்டும் பல நடிப்பு திலகங்களும் மக்கள் திலகங்களும் இங்கு உருவாகி விடுவார்கள்.அதனை தவிர்க்க வேண்டுமென்றால் நாம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை ஊக்குவிக்கவேண்டும்.

Sunday, April 26, 2009

மூதுரை

நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்உழகில்
நல்லார் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெயுமாம் மழை .

கருத்து:
ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான்.அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயளை சென்றடைகிறது.அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும்.அதுபோல இவ்வுலகில் நன்மக்கள் இருக்கின்ற காரணத்தினால் பெய்யும் மழையானது அங்கே வாழ்கின்ற கீழ்மக்களுக்கும் பயனை கொடுக்கும்.
உவமை: நெல்பயிர் - நன்மக்கள்
புல் - கீழ்மக்கள்

Tuesday, December 2, 2008

குறள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

Wednesday, November 19, 2008

குறள்

நிலத்தியல்பால் நீர் திரிந்தர்த்தகும் இனத்தியல்பால்
தாகும் மனித அறிவு .

-திருக்குறள்
கருத்து:
மழை நீர் எவ்வளவு சுத்த மனதாக இருப்பினும் அது எந்த நிலத்தை அடைந்தாலும் அந்த மண்ணின் குணத்தையே அந்த மழை நீர் பெரும் .அது போல மனிதர்களின் அறிவும் ,குணநலன்களும் அவர்கள் சேரும் இனத்தை பொருத்தது.

Tuesday, September 2, 2008

திரு மந்திரம்

அத்தி பழமும் அகத்திக் கீரை வித்தும்
கொத்தி உலைப் பெய்து கூல் இட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அகத்திக் கீரை வித்துன்ன
கத்தி எடுத்தவர் காடு புக்கரே.

Wednesday, May 28, 2008

ஆத்திசூடி

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விலம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் தவிர்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்

குறிப்பு:மன்னிக்கவும்.நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது மனப்பாடம் செய்த பாடலாதளால் இப்பாடலின் கடைசி இரு வரிகள் மறந்து விட்டது.